பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


119. ஒற்றைக் காலால் ஆடுவான்;

'உம்'மெனப் பாட்டுப் பாடுவான்.

இந்தோ -சீனா


120. அம்மா வுடனே
ஆயிரம் குழந்தைகள்,
விடிந்ததும் அவர்கள்
அனைவரும் மடிந்தனர்.
அப்புறம் வந்தான்
அவன் ஒருவீரன்.
அவனைப் பார்க்க
அனைவரும் அஞ்சினர்.

121. முந்நூறு கால் உடையாள்;
முணுமுணுப்புத் தான் அறியாள்;
வேண்டாத பேரை யெல்லாம்
விரட்டி ஓட்டும் வேலைக்காரி.

122. என்னைப் போலே இருப்பாய்;

ஆனால், ஏனோ பேச மாட்டாய் ?