கருணாநிதி 99 உடனே நயினா கதவோரத்தில் நின்றபடி, "என்னம்மா வேண்டும் ?" என்று கேட்டான். "ஒன்றுமில்லை, மருந்து கொண்டுவந்தேன். நல்ல தூக்கம். தொந்தரவு பண்ணக்கூடாது. தயவுசெய்து விழித்தவுடன் என்னைக் என்னைக் கூப்பிடுங்கள். நான் வந்து மருந்தைத் தருகிறேன். இதோ... இந்த மேசையில் இருக் கட்டும் மருந்து!" என்று கூறிக்கொண்டே நர்ஸ், மருந்து சீசாவை மேசைமீது வைத்துவிட்டு அதைவிட்டு அகன் ாள். நயினா முகம்மது தாழ்வாரத்தில் அமர்ந்து சிந்தனை யில் ஆழ்ந்தான். அவன் மனக்கண் முன்னே எழில் மயமான இன்ப எதிர்காலம் காட்சியாயிற்று. கண்களை அப்படியே இலேசாக மூடிக்கொண்டு அந்தக் கற்பனைக் காட்சியை அனுபவிக்கத் தொடங்கினான். - அவன் தோள்பட்டையிலே இரண்டு இறக்கைகள் முளைக்கின்றன. வானத்திலே பறக்க ஆரம்பிக்கிறான். நட்சத்திரத் தோட்டம் - அந்த விண்மலர்ப் பூங்காவுக் கிடையே ஒரு தும்பிபோல நீந்திச் செல்கிறான். நட்சத்திரப் பூக்கள் தங்களது செழிப்பான தலையைத் தாழ்த்தி அவனை அழைக்கின்றன. அவனோ எதையோ ஒன்றை நாடிப் பறக்கிறான். பளபளப்பான பட்டுப்பூச்சியொன்று வனப்பு மிக்க சிறகு பறப்பி அந்த நந்தவனத்தில் நடனமாடுகிறது. அதன் முகத்திலே ஆனந்தியின் முகம் பதிக்கப்பட்டிருக் கிறது. அவன் அவளோடு சென்று உல்லாச நடனம் புரிகிறான். இருவரும் நட்சத்திர சோலையைப் பிரிந்து இன் னும் மேலே பறக்கிறார்கள். வானத்தின் நீலக் கூரையைப் பிய்த்துக்கொண்டு அதற்கு மேலே பறந்துவிடுகிறார்கள். கிழிபட்ட வானக் கூரையிலிருந்து நட்சத்திரங்கள் பொல பொலவென்று உதிர்கின்றன. புயல் காற்றில் "லஸ்தர் விளக்கு ஆடுவதுபோல சந்திரன் அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருக்கிறான். வான்முகட்டையும் தாண்டிப் பறக் கும் இன்பலோகக் காதலர்களின் இறக்கைகள் திடீரென்று கழன்றுவிடுகின்றன. பறக்கும் சக்தியற்ற அவர்கள் தடார் என்று பூமியின் மீது வந்து விழுகிறார்கள்.
பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/100
தோற்றம்