மு. கருணாநிதி 129 னுடைய வீடு வீடு எது என்பதை விவரமாகத் தெரிந்து கொண்டு காரிலேயே திரும்பினான். சிந்தாமணி போலீஸ்காரர்களிடமிருந்து விடுபட்டு, லாக் அப்'பிலே அடைக்கப்பட்டாள். கரப்பான் பூச்சி களும், வளவால் புழுக்கைகளும் நிறைந்த அந்த இருட் டறையிலே வாழ்வின் ஒளி தேடிக் கிளம்பிய வைர நிலவு வீழ்ந்து கிடந்தது. "மங்களகர”மான வெள்ளிக்கிழமை, கடையைக் கட்டிக்கொண்டு சனிக்கிழமைக்கு வழி தை விட்டது.
பலகணி வழியே உதய சூரியனின் பொற் கரங்கள் நீட்டப்பட்டு, பாலையூர் மருத்துவ மனையிலே ஆனந்தி துயி லுதறி யெழுந்தாள். நயினா முகம்மது, அருகே வந்து, ஹார்லிக்ஸ் போடட்டுமா?' என்றான். தேவைதான் எனும் விதத்தில் அவளும் தலையசைத்தாள். இரவு பேசிய பேச்சுச்கள் அவர்கள் இருவரையும் நாணத்தில் ஆழ்த்தி யிருந்தன. அந்தப் பேச்சின் தொடர்ச்சியாக அவர்கள் பார்வையிலே வித விதமான மாற்றங்கள் பிரகாசித்தன. அன்று பகல் முழுவதும் மௌனமாகவே இரண்டு இதயங் களு ம் எண்ணங்களை முழங்கிக்கொண்டிருந்தன. பேசுவ தால் காணுகிற முடிவைவிட, மௌனத்தாலும், விழியசை வாலும் சிறந்த முடிவைக் காணமுடியுமென்பது காதல் இலக்கணம். காதலுக்கு இணக்கம் தெரிவிக்கும் உள்ளம் பெற்றிருப்பவர்கள்கூட, நாணத்தாலோ-அச்சத்தாலோ, அந்த எண்ணத்தை வார்த்தை வடிவில் வெளியிடத் தயங் குவார்கள். நான் உன்னைக் காதலிக்கிறேன் 99 என் று திடுமென ஒரு பெண்ணிடம் சென்று பேசிவிட்டால், இஷ்ட முள்ளவளாயிருந்தால்கூட, 'எட்டி நில்' என்று கூறு வாளே தவிர, கட்டிக்கொள்வாய் கண்ணாளா!” என் கிட்ட வரமாட்டாள்! அதனால்தான் காதல் மாளிகையின் முதல் நுழைவுவாயில் என்று கண்கள் சிறப்பிக்கப்படு கின்றன. கண்கள் மாத்திரம் இல்லாவிட்டால், காதலர்கள் 9 . என்று