132 வெள்ளிக்கிழமை "கைத்தடியில்லாத குருடன் கல்லும் முள்ளும் நிறைந்த காட்டில் விடப்பட்டதுபோல் ஆகிவிட்டதே என் நிலைமை" என மனதுக்குள் சொல்லி கண்ணீர் வடித்தான். "நீண்டநேர மௌனம். தாயாரம்மாள் வந்தாள். தடு மாறியவாறு! செய்தி கேட்டு அவளும் சுருண்டுபோனாள். "நயினா முகம்மது என்ன ஆனான்? என்று அழுகையை அடக்கியவாறு அழகு கேட்டான். 11325 "அய்யோ! அதையேன் கேட்கவேண்டும் மூன்று நாளாகிறது -- வீட்டிலேயிருந்த நகை நட்டுக்களை மூட்டை கட்டிக்கொண்டு, உங்கள் நண்பன் எங்கேயோ கம்பி நீட்டி விட்டான்... எனச் சொல்லி மேலும் அழுதான், டைகர் ! 99 இந்த வார்த்தைகளை அழகப்பனால் நம்பமுடியவில்லை தான் - ஆனாலும், அந்த டைகர் அழுதுகொண்டே சொல் கிறானே நம்பாமல் என் செய்வது? தன் நண்பன் இவ்வளவு பெரிய கயவனா? ஓரேகுழப்பம் அவனுக்கு!- டைகர், அழகப்பனை வெகு விரைவில் தன் பக்கம் திருப்பிக்கொண்டான். தாயாரம்மாளும் டைகர் பக்கம் சேர்ந்துகொண்டு, நயினாவுக்கு அர்ச்சனைகள் செய்தாள். இறுதியில் டைகரிடம், அழகப்பன் ஒரு ஆயிரரூபாய்க்கு நோட்டுக்கத்தையைக் கொடுத்து ஆறுதல் கூறினான். 'ஆயிரம் ரூபாய், ஆனந்தியின் உயிருக்குச் சம மாகுமா?" என ஒப்பாரிவைக்கத் தொடங்கினான் டைகர். அவனைச் சமாதானம் செய்து அழகப்பனும், அவன் தாயா ரும் வழியனுப்பிவைத்தார்கள். டைகர், மூக்கைச் சிந்தியவாறே அந்த பங்களாவை விட்டு வெளியேறினான். அவன் வெளியிற்சென்று கால் மணிநேரத்திற்கெல்லாம் தபால்காரன் ஒரு கவரை அழகப் பனிடம் கொடுத்தான். கவரின் மேலேயுள்ள விலாசம் நயினா முகம்மதுவின் கையெழுத்துபோல இருந்தது.
பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/133
தோற்றம்