142 வெள்ளிக்கிழமை ம இருந்தன. பஞ்சாயத்தார் சாயத்தார் கூடி தற்கொலைதான் என்று முடிவு செய்யமட்டுமே அந்தக் கடிதம் பயன்பட்டது. ஊரார் அனைவருங்கூடி சிவநேசரின் அமைதி நிறைந்த உடலைப் புதைத்துவிட்டுத் திரும்பினார்கள். அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது ; நன்றாக வாழ்ந்துகொண்டிருந்த குடும்பத்தில் இப்படித் திடீரென்று பயங்கரமான மாறுதல் எப்படி ஏற்பட்டது என்று ! புயல்கூட அடிப்பதற்கு முன்பு தெரிந்துவிடுகிறது. வெள்ளம் வருவதற்குமுன் கண்டு பிடித்துவிடலாம். சிவநேசர் குடும்பத்தைச் சீரழித்த நிகழ்ச்சிகளுக்கு எந்தவித முன்னறிவிப்பும் கிடையாது. ஊரிலே பலர் பலவிதமாகப் பேசிக்கொள்ள ஆரம்பித் தனர் சிவநேசரின் குடும்பத்தைப்பற்றி! அழகப்பனின் மனத்திலும் குழப்பம் தலைதூக்கத் துவங்கியது. குழந்தை பெற்ற சிந்தாமணி பெங்களூர் எப்படிச் சென்றான்? அபின் எப்படிக் கடத்த முடிந்தது? இவ்வளவுக்கும் உடல் நிலை எப்படி இடங்கொடுக்கும்? கேள்விகள் மாறி மாறி எழுந்து அவன் இதயத்தை நிரப்பிக்கொண்டேயிருந்தன. அதோடு, ஆனந்தியிடம் அவன் நடந்துகொண்டதும், அதை ஆனந்தி வரவேற்ற முறையையும் அவனைப் பாயத்தி லும் சங்கடத்திலும் ஆழ்த்திவிட்டது. சிந்தாமணியைப் பற்றி அவனிடம் விளக்கமுரைக்கவேண்டுமென்று எண்ணி யிருந்த நயினா முகம்மது அந்தப் பேச்சையே எடுக்காம லிருந்துவிட்டான். காலையில் அவன் கண்ட காட்சியை நினைத்து நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டான். தன் நண்பன் அழகப்பனுக்கு இப்படியொரு எண்ணம் இருக் கிறதென்று முன்பே தெரிந்திருந்தால் ஆரம்பத்திலேயே ஆனந்தியை விட்டு வெகுதூரம் விலகிப்போயிருப்பான். இதிலே, அவன் செய்த பெரிய தவறு, ஆனந்திமீது அவனுக்குள்ள அன்பையும் காதலையும் அழகப்பனிடம் முன்பே சொல்லாததுதான்! சொல்லியிருந்தால் அழகப் பன் ஆனந்தியை நினைக்காமலே இருந்திருக்கக் கூடும்! இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணுவது எங்ஙனம் என்ற சிக்கலிலே அகப்பட்டுத் தவித்தான் நயினா முகம்மது!
பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/143
தோற்றம்