மு. கருணாநிதி 143 ஆனந்தி, தன்னைப்பற்றி நயினா முகம்மது தவறாகக் கருதிவிட்டானோ தவித்துக்கொண்டிருந்தாள் ; என்று . அவனைத் தனியாகச் சந்தித்து விளக்கம் உரைக்கவும் வசதியில்லாமல் போய்விட்டது. நண்பர்கள் இருவரும் மனத்திலே ஆயிரம் எண்ணங்களை உருவாக்கிக்கொண்டு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தாலும் கூட ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் உரையாடிக்கொண்டும் உறங்கிக் கொண்டுமிருந்தார்கள். அதனால் நயினாவைத் தனித்து சந்தித்துப் பேச ஆனந்திக்கு வாய்ப்பே கிடைக்வில்லை. சிந்தாமணியைப்பற்றி எழுந்த கேள்விகளுக்கு அழகப்பன் நயினாவிடம் விடை கேட்டிருப்பான் வேறு நாட்களாயிருந் தால்! ஆனால் அழகப்பனுக்கு இப்போது ஒரு பெண்ணைப் பற்றித் தன் நண்பனிடம் பேசவே கூச்சமாயிருந்தது. ஆனந்தியைத் தான் தழுவியதையும், அவள் அதைவிட்டு ஓடியதையும் நயினா பார்த்துவிட்டான் என்பது அவனுக்கு நன்றாக விளங்கும். அதனால் தனக்கும் ஆனந்திக்கும் காதல் உருவாகியிருப்பதாகக்கூட நயினா கருதலாம். அந்தக் கருத்தையே நாமும் வலியுறுத்தி விட்டால் என்ன என்ற எண்ணமும் அவனுக்கு எழுந்தது. கு இறுதியில் அழகப்பன் நயினாவிடம் தனக்கும் ஆனந் திக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டிருப்பதாகவே வர்ணித்து ஒரு கற்பனைக் கதையைக் கூறிவைத்தான். நயினா அந்தச் செய்தியைக்கேட்டு பொறாமை கொள்ளவில்லையென்றாலும் மிகுந்த வருத்தமுற்றான். அந்த வருத்தமும், ஆனந்தி தன்னைவிட்டுப் போய்விட்டாளே என்பதால் ஏற்பட்ட தல்ல! ஆள் மயக்கும் ஆனந்தியின் வலையிலே அழகப்பனும் விழுந்து விட்டானே யென்பதால் ஏற்பட்டதுதான்! இதை அவனிடம் எவ்வண்ணம் விரிப்பது ? வெளியிட்டால் அழகப்பன் தன்னைப்பற்றித் தவறாகக் கருதக்கூடும்! அவன் காதலை முறிப்பதற்காக, தான் தீட்டும் சதித் திட்டம் அதுவெனத் தீர்மானித்தாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. சரி; எப்படித்தான் மாறுதல்கள் மலர்கின்றன என்று கவனிப்போம் என்று பொறுமையை வரவழைத்துக்
பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/144
தோற்றம்