உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 வெள்ளிக்கிழமை தாமதம்; சிந்தாமணிக்கு உலகமே சுற்றியது போலிருந் தது. தேவரின் முகம் மாறிவிட்டது. வக்கீலைப் பார்த்து, "என்ன சார் : சொல்லவேண்டாமென்றேன்; சொல்லி விட்டீர்களே?” என்று கடிந்துகொண்டார். வக்கீல் மிரள மிரள விழித்து, "மன்னிக்கவும் மிஸ்டர் தேவர்! வாய்தவறி உண்மையைச் சொல்லிவிட்டேன்! பரவாயில்லை . என்றைக்கிருந்தாலும் ஒருநாள் தெரியத் போகிறது!" என்று மழுப்பினார். சிந்தாமணி தேவரின் காலைப் பிடித்துக்கொண்டு, தானே பார்த்தார். க "என்னை எப்படியாவது உடனே வேதபுரத்துக்கு அனுப்பிவையுங்கள். என் அம்மாவையாவது உடனே நான் பார்க்கவேண்டும்!" என்று கதற ஆரம்பித்தாள். வர் அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லிப் "ஒருவழியாக வழக்கில் வெற்றி பெற்று விடுதலை அடைந்தபிறகு தாயாரைப் போய்ப் பார்க்கலாம்; அம்மாவுக்கும் அப்போது சற்று ஆறுதலாக இருக்கும் " என்று கூறினார். சிந்தாமணி கேட்டால்தானே ! வக்கீலும் அவள்பக்கம் பேசி," அடுத்த வாரந்தானே கோர்ட்டுக்கு வரவேண்டியிருக்கிறது; அதற்குள் அவள் போய்விட்டு வரட்டுமே " யென்று வாதாடினார். அதில் வெற்றியும் கண்டார். தேவரையும் தன்னோடு கூப்பிட்டாள் சிந்தா மணி. அதற்குத் தேவர். தனக்கு பெங்களூரில் மிக முக்கிய மான வேலை ஒன்று இருப்பதாகவும், அதை முடித்துக் கொண்டு நாளை இரவு ஊருக்குப் புறப்பட இருப்பதாகவும், நாளை மறுநாள் வேதபுரத்தில் வந்து சிந்தாமணியை சந்தித்து, இருவருமே புறப்பட்டு பெங்களூருக்கு வந்து விட்டால், வழக்கு விஷயங்களைக் கவனிக்கலாமென்றும் கூறி, அன்று பகல் வண்டியிலேயே சிந்தாமணியை வேத புரம் அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். சிந்தா மணியும் தேவருக்காக வேதபுரத்தில் காத்திருப்பதாகவும், நாளை மறுநாள் அவர் வரும்போது அவரோடு பெங்களூர் வரத் தயாராய் இருப்பதாகவும் கூறினாள். பின்னர், வேத புரம் புறப்பட்டாள்; தாலி இழந்த தன் தாயைச் சந்திப்