உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 று வெள்ளிக்கிழமை லோகத்தில் இருப்பீர்களேயானால் அங்கே வந்து, ஆனந் தியைக் கொன்றுவிட்ட ஆனந்தமான செய்தியை உங்க ளுக்குச் சொல்லுவேன்! இப்போது தானம்மா தேவலோகம் என்று உண்மையிலேயே ஒன்று இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்குமென்று எனக்குத் தோன்றுகிறது ! இதோ; நான் என் வேலையை முடித்துவிட்டு வருகிறேன். ஆனந்தி! உன்னைப் பழிக்குப்பழி வாங்குகிறேன்! என் குடும்பத்தைக் கு லைத்துவிட்டு நீ கோலாகலமாக வாழ முடியாது! நீயும் எங்களோடு வரவேண்டியவள்தான்!" ஆவேசங்கொண்டு தன்னையறியாமல் கத்தினாள் சிந்தா மணி. தாயின் பாதங்களைக் கண்களில் ஒத்திக்கொண் டாள், வெறிபிடித்தவள்போல வீட்டை வீட்டு வெளியேறி ஆனந்தி மருத்துவ மனையிருக்கும் தெரு நோக்கி ஓடினாள். அவள் கையிலே ஆனந்தி அகப்பட்டால், அவளைக் கிழித் துக் கொன்றுபோட்டுவிட்டுத்தான் அடுத்த அடி வைப் பாள்; அவ்வளவு பழியுணர்ச்சி பெருக்கெடுக்கத் துவங் கிய யது அவள் உள்ளத்தில்! . தன் எப்படி யெப்படி மாறுதல்கள் மலர்கின்றன பார்ப் போம் என்று கவனித்துக்கொண்டிருந்த நயினா. அறையில் தூக்கமின்றித் தவித்துக்கொண்டிருந்தான். ஆனந்திக்கும் அழகப்பனுக்கும் கூட ஒருவேளைத தொடர்பு ஏற்பட்டிருக்குமோ என மயங்கியது ஒரு சமயம் அவன் உள்ளம்! சேச்சே... இருக்காது என்று தேற்றிக்கொண்டது ஒரு சமயம்! ஆனந்தி, தன் பழைய கதையை அவனிடம் சொன்னதால்தான் அவனுக்கு அவள்மீது அவ்வளவு ஐயம் எழ ஏதுவாகிவிட்டது. வீண் சந்தேகத்தால் குழம் பிக்கொண்டிருப்பானேன்; ஒரு சோதனை நடத்தி அவளைப் பற்றிப் புரிந்துகொள்ளலாமே யென்று முடிவு கட்டினான் நயினா. அழகப்பன் மீதும் அவள் வலைவீசுகிறாள் என்றால், இரவு எப்படியும் அவன் அறைக்கு வந்தே தீருவாள். அப்படி அவள் அழகப்பன் அறைக்கு வரும்போது அங்கே தானிருந்து அவளைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டால்...?