மு. கருணா நிதி 151 தன் இப்படியொரு கேள்வியைப் போட்டுக்கொண்டு, தன் சோதனையைச் செயல்படுத்த முனைந்து எழுந்தான். அறையிலிருந்து அகன்று அழகப்பன் அறைக்குப்போனான். அழகப்பனும் தூக்கமின்றிப் படுக்கையில் புரண்டுகொண் டிருந்தான். நயினா அங்குப் பிரவேசித்து, "இங்குக்கொசுக் கடி அதிகமாயிருக்கும். நான் படுத்திருக்கும் அறையில் நல்ல கொள்ளலாமே " 6 காசுவலையிருக்கிறது; அங்கு போய், அறையில் . ஒரு ம என்று கூறினான். அழகப்பன் முதலில் வேண்டாமென்றுதான் கூறினான். ஆனாலும் அவனுக்கும் ஓரு ஆசை; ஆனந்திக்கும் நயினாவுக்கும் தொடர்பு இருக் கிறதா என்று கண்டுபிடித்துவிடவேண்டுமென்று! வேளை நயினாவின் அறைக்கு அவள் வர நேர்ந்தால் அவ ளிடம் தானே மனம் விட்டுப்பேசி நிலைமையைச் சீர் செய் விடலாமென்றும் எண்ணியிருந்தான். நயினா வலியுறுத் தியதன் பேரில், அழகப்பன் நயினாவின் அறையில் போய்க் காசுவலைக்குள் படுத்துக்கொண்டான். நயினாவும் அழகு வின் அறையில் படுத்தவாறு தூக்கமின்றித் தவித்துத் கொண்டிருந்தான். சிறிதுநேரத்திற்கெல்லாம் உ து யாரோ வரும் காலடி ஓசை கேட்டது. எழுந்து வந்து உற்றுக் கவனித்தான். மறைந்து மறைந்து ஒரு பெண் வருவது தெரிந்தது. சத்தம் காட்டாமல் அறைக்குள்ளே போய்க் காத்திருந்தான். யாரும் வரவில்லை. மெதுவாக எழுந்து வந்து பார்த்தான். யாரையும் காணவில்லை. மறுபடியும் அறைக்குள்ளே சென்று கவனித்துக்கொண்டிருந்தான். மீண்டும் யாரோ நடந்துவரும் ஓசை, அந்த நள்ளிரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு வந்தது. நயினா, ஒளிந்த வாறு ஒலி வரும் திக்கில் நாட்டம் செலுத்தினான். ஆனந்தி தான் அது! அவள், அழகு படுத்திருக்கும் அறைக்குள்ளே போய்க்கொண்டிருந்தாள். அவள், அந்த அறையில் நயினாதான் படுத்திருப்பான் என்று கருதி அங்குப் போகி றாள். நயினாவுக்கு அவள் மீதிருந்த சந்தேகம் பெரும்பகுதி நீங்கிவிட்டது. உண்மையிலேயே அவளுக்கு அழகப்பன் மீது கண்ணிருக்குமானால் தான் இருக்கும் அறைக்கல்லவா வந்திருக்கவேண்டும்- அவளோதான் வழக்கமாக உறங்கும்
பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/152
தோற்றம்