உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 157 ஆனந்தியிருக்கும் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அம்மிக் குழவியை ஆனந்தியின் தலையில் போட்டு அவளைக் கொன்றுவிடுவது என்ற முடிவு! அயலார் குழவி யைத் தன்னருகே படுக்கவைத்துத் தன்னை வேசியாக்கிய வளின் தலையிலே - இந்தக் கருங்கல் குழவியைப் போடுகி றேன் என்று மனத்திற்குள் 'சபதம்' செய்துகொண்டாள் போலும். ஆனந்தியோ, தன் கா தலனின் நிலைமை கண்டு மூர்ச் சித்து விழுந்திருக்கிறாள்; படுக்கையிலே! மரணத்தை எதிர் பார்க்கும் அச்சம் ஒரு சிறிதுமில்லாமல் அவளைச் சாவு. உலகிற்கு அனுப்பிவிட சிந்தாமணி வந்துவிட்டாள். கொலை செய்யப் போகிறோம் என்ற பயம் சிறிதும் தலை காட்டவில்லை சிந்தாமணிக்கு! எல்லாவற்றிற்கும் துணிந்து விட்ட ஒரு அசட்டுத் தைரியம் அவள் முகத்திலே பிரகா சித்துக்கொண்டிருந்தது. மங்கலான வெளிச்சத்திலே அவளது முகம் மிகப் பயங்கரமாகத் தோற்றமளித்தது. குறி பார்த்துக் குழவிக் கல்லை அவள் தலைமீது போடுவதற் குத் தயாராகி விட்டாள் அந்த இளஞ்சிட்டு! அவளைத் தடுப் பதற்கு அங்கு யாருமே இல்லை. மனச்சாட்சி யொன்றுதான் குறுக்கிட்டிருக்க வேண்டும். மாறாக அதுதான் அவளைக் கொலைச்செயலுக்குத் தூண்டிவிட்டுத் தூபம் போட்டது. அழகப்பனோ, தன் அறையில் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந் தான். இன்னும் அவன் நினைவுகள் புரண்டு படுக்க்கூட இயலாமல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தன. நயினா முகம்மது, தள்ளாடியபடியே மாடியைக் கடந்து கீழே வந்து, முகத்தையும் காயம்பட்ட இடங்களையும் கழுவிக் கொண்டான். அங்குள்ள சில மருந்துகளை அவனே காயங் களில் தடவிக்கொண்டான். பிறகு அங்குள்ள ஒரு நாற் காலியில் அமர்ந்து தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தான். ஆளந்திக்கும் தனக்கும் ஏற்பட்ட ஒருவாரத் தொடர்பு, நீண்ட நாளைய தன் ஆருயிர்த்தோழனிடத்திலே எவ்வளவு பெரிய பகையைத் தோற்றுவித்து விட்டது என்று எண்ணி னான். அடி வாங்கியபோது வலி மிகுந்த சமயங்கூட வராத