மு. கருணா நிதி "அதுதான் எனக்கும் தெரியவில்லை 161 ஒருவேளை அவள் நம்மைப் பார்க்க பெங்களூர் ஓடி வந்திருக்க வேண்டும் - வரும் வழியில் இப்படியொரு அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம் என்று நான் யூகிக்கிறேன். சிந்தா மணியைப்பற்றி, ஆனந்தி கூறும் பாராட்டுரைகளைக் கேட் கும்போது, அவள் ஒரு பத்தரைமாற்றுப் பசும்பொன் என்றுதான் தீர்மானிக்கவேண்டும். உன் மனத்தைத் திருப்ப முயல்வதாக நினைக்காதே அழகு! உண்மை யாகவே சிந்தாமணி மாசற்றவள்!” ரு "எனக்கு ஒரே குழப்பமாயிருக்கிறது நயினா! என்னால் எதையுமே சிந்திக்க முடியவில்லை..." 66 சிந்திக்க நேரம் எடுத்துக்கொள். சிந்தாமணியைப் பற்றி எந்த அவசரமான முடிவுக்கும் இப்போது வரத் தேவையில்லை. மாசு படிந்தவள் என்று நாம் முடிவு கட்டுகிற ஒரு வார்த்தையால் ஒரு பெண்ணின் வாழ்வே அஸ்தமித்துப்போகும் நிலைமை ஏற்படுகிறது என்பதை மட்டும் அடிப்படையாக வைத்து, அவளைப்பற்றிய ஆராய்ச்சியை நடத்தி தீர்க்கமான முடிவுக்கு வருவது நல்லது நண்பா !" சரி நயினா...... நீ கூறுவதுபோலவே அவகாசமெடுத் துக்கொண்டு, அதைப்பற்றி முடிவு கூறுகிறேன்......வா, ஆனந்தியிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள ஆ வேண்டும்!.." நயினாவும், அழகுவும் அவர்கள் இருந்த அறையை விட்டுப் புறப்பட்டு ஆனந்தியிருக்கும் அறை நோக்கிச் சென்றார்கள்......ஆனந்தியைச் சமாதானம் செய்து தன் னுடைய தங்கையாக ஏற்றுக்கொள்ள எண்ணி நடத்தான் அழகு! புயலுக்குப்பின் அமைதி உருவாயிருப்பதாக நினைத்து மகிழ்ந்தான் நயினா. ஆனால் இந்த இருவரின் எண்ணத்திலும் மண்ணைப் போடுவது போன்ற பயங்கரமான காட்சியை ஆனந்தியின் அறையிலே கண்டார்கள். 11-A
பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/162
தோற்றம்