174 வெள்ளிக்கிழமை போலி பாலகங்காதரத் கண்டுபிடிக்கவேண்டுமென்றும் சிக்கவைக்கவேண்டுமென்றும், தேவர் யார் என்று தீர்மானித்துக்கொண்டாள். தீர்மானத்தின்படி அவள் வேலையைத் துவங்குவதற்கு இருளும் வந்து சேர்ந்தது. கால் வலியையும் பொருட்படுத் தாமல் நடந்து நடந்து, 'டி எஸ்.பி.' அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தாள். டி.எஸ்.பி. மிக அக்கறையோடு சி தாமணி தெரிவித்த விஷயங்களைக் கவனித்தார். சிந்தாமணி தன் கதை முழுவதையும் 'டி. எஸ். பி 'யிடம் வர்ணித்தாள். அவருக்குச் சிந்தாமணியின் மீது ஆழ்ந்த அனுதாபம் ஏற்பட்டது. . ம் போலீஸ் படையுடனும், சிந்தாமணியுடனும் 'டி எஸ்.பி' புறப்பட்டு நேராக அய்யனூர் சென்றார். அப்போது, பாலகங்காதரத் தேவர் வீட்டிலே பாரத காலட்சேபம் ஒரு பாகவதரால் அதிக விமரிசையாக நடை பெற்றுக்கொண்டிருந்தது. தேவர் ரு ஆடம்பரமான ஆசனத்தில் அமர்ந்து காலட்சேபம் கேட்டுக்கொண்டிருந் தார். ஊர் மக்களும் குழுமி இருந்தார்கள் போலீஸ் படை நல்ல சமயத்தில் 'திபு திபுவென உள்ளே புகுந்தது. சிந்தாமணி போலீசாரிடம் தேவரும், இடும்பனும் இரத்தக் கறை படிந்த துணிகளையும். அரிவாளையும் புதைத்து வைத்த இடத்தைக் காட்டினாள். அந்த இடத்தைச் சோதித் ததில் இரத்தத் துணிகளும் அரிவாளும் அகப்பட்டன. தே இடத்தில் தேவரும் இடும்பனும் கைது செய்யப்பட் டார்கள்! போலி பாலகங்காதரத் தேவர் யார் என்று கண்டு பிடிக்கவேண்டுமே; அதற்காக சிந்தாமணியின் யோசனைப் படி போலீசார் சிந்தாமணியின் வீட்டில் பதுங்கியிருந் தார்கள். சிந்தாமணியிடம் பெங்களூரில் தெரிவித்திருந்த வாறு, போலி பாலகங்காதரத் தேவர் ஒரு வாடகை மோட் டாரில் வந்து இறங்கினார். போலீசார் அவரைச் சூழ்ந்து
பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/175
தோற்றம்