மு. கருணாநிதி 175 கொண்டார்கள். டி.எஸ்.பி.' அவரது வேடத்தைக் கலைத்தார். பாலகங்காதரர் மறைந்துவிட்டார். அந்த இடத்திலே டைகர் தான் நின்றுகொண்டிருந்தான். அவன் டைகர்தான் வலையில் தன்னை சிக்கவைக்கும் கருத்துடனே தான் தனக்கு உதவி செய்திருக்கிறான் என்பதைச் சித்தாமணி புரிந்து கொண்டாள். போலீசாருக்கு ஒரே மகிழ்ச்சி! தங்களை ஏமாற்றி ஓடிவிட்டவன் அகப்பட்டுக்கொண்டானே என்ற பூரிப்பு! அவர்கள் சிந்தாமணிக்கு நன்றி தெரிவித்து வீட்டுப் பிறகு வந்து சந்திப்பதாகச் சொல்லி, டைகரை விலங்குமாட்டி இழுத்துக்கொண்டு புறப்பட்டார்கள். மறுநாள் காலையில் நயினா முகம்மதும், அழகப்பனும் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு ஒன்று மே புரியவில்லை வேலைக்காரன் வேம்புவிடம் விவரம் கேட்டார் கள். அவன், "எனக்கு இந்தக் கொலையைப்பற்றி எதுவும் தெரியாது. வெளியில் எங்கேயோ போய்விட்டு, மருத்துவ மனைக்குத் திரும்பும்போது யாரோ ஒருவன் மருத்துவமளை யிலிருந்து ஓடிவந்து என்னைத் தெரிந்தவனைப்போல் “டே வேம்பு! ஆனந்தியை நயினா முகம்மது கொலை செய்து விட்டான்! இதோ, போலீசை அழைத்துவருகிறேன் என்று ஓடினான் போனவன் திரும்பவில்லை. அதற்குள் போலீஸ் வேன் ஒன்று இந்தப் பக்கம் போகவே அவர்களை நிறுத்தி அழைத்துக்கொண்டு மேலே வந்தேன். எனக்கு அப்போது அவ்வளவுதான் தெரியும் !” என்றும் விளக்கினான். 86 கு ஆனந்தியைப் பாலகங்காதரத் தேவர் கொலைசெய்ய வேண்டிய அவசியமென்ன ?” என்று கேட்டான் அழகப்பன். அதற்கு வேம்பு, 'சில நாட்களாகவே தேவர், ஆனந் தியை அவரது பங்களாவுக்கு வருந்தி வருந்தி அழைத்த தாகவும்- அதை அந்த அம்மாள் மறுத்ததால் இப்படிச் செய்திருப்பார் என நினைக்கிறேன் " என்றும் யூகம் தெரிவித்தான்.
பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/176
தோற்றம்