உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வெள்ளிக்கிழமை கள் தானே கிருஷ்ணபரமாத்மாவாகத் திரியமுடிகிறது! டைகரைச் சுற்றி எப்போதுமே ஒரு வாலிபப் பட்டாளம். அவன் குடித்து மிச்சம்வைத்த டீயைக் குடிக்க! புகைத்து வீசியெறிந்த சிகரெட் துண்டைப் புகைக்க! மற்ற நேரங் களில் அவன் இட்ட வேலையைச் செய்து வயிறுவளர்க்க ! இத் தகைய பட்டாளமொன் று பக்கபலமாக இருக்கும் போது டைகர் போன்றவர்கள் வேதபுரம் போன்ற ஊர் களிலே வீரர்களாக உலவ முடியாதா என்ன? டைகருக்கு இயற்பெயர் அதுவல்ல! பெற்றோர்கள் இட்ட பெயர் ராம கிருஷ்ணன். பரமஹம்சரிடத்திலே பக்திமிகுந்தவர் செத் துப்போன அவன் அப்பா! அதனால் அவரது நினைவாக அப்பெயர் சூட்டினார். பரமசாதுவாக வளருவான் தன் மகன் என்று பறைசாற்றிக்கொண்டிருந்தார். அவனோ டைகர் என்ற பட்டத்துக்குரியவனாக - வேதபுரத்து வீரனாக வளர்ந்துவிட்டான் ராமனுக்கு அருகிலே ஒரு குரங்குப் பட்டாளம்-இவனுக்கும் அப்படித்தான்! கிருஷ்ணனுக்கு பாவையர் பட்டாளம் தேவைப்பட்டது ! இவனும் அந் நிலைக்கு உயர்ந்துகொண்டிருந்தான். . B எப்படியோ ஒருவிதத்தில் தந்தை வைத்த பெயர் அவனுக்குப் பொருத்தமாகவே அமைந்திருந்தது. ராம கிருஷ்ணன் டைகரானான். அந்த டைகரின் வேட்டையில் சிக்கிய இளமான்கள் ஏராளம். சிந்தாமணி, அவனுக்கு சொந்தக்காரி. மாமன் மகள், ஒரு உறவுக்கு! அவளைத் திருமணம் என்ற பெயரால் சுவைக்கவேண்டுமென்று திட்டமிட்டான் டைகர். சிந்தாமணியின் தந்தை டைகரின் மிரட்டல்களுக்குப் பணிய வில்லை. மிஞ்சல்-கெஞ்சல் எது வுமே அவரை அவன் பக்கம் சாய்த்திட உதவவில்லை. அவருக்குத் தெரியும் அவனது நடவடிக்கைகள் அனைத் தும்! ஊருக்கேதெரியும்-ஏன்; ஆனந்திக்குக் கூடத்தான் தெரியும்; டைகர் எப்படிப்பட்டவன் என்று! டைகருக்கு மட்டுமே ஆனந்தி எப்படிப்பட்டவள் என்று தெரியாமல் இருந்தது. அந்த ரகசியத்தை வெளியிடத்தான் போலும், வேம்பு ஆனந்தி வீட்டுக்கு வேலைக்காரனாக வந்து சேர்ந் ம து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/25&oldid=1708051" இலிருந்து மீள்விக்கப்பட்டது