என்ன - மு. கருணாநிதி 27 “என்னடா - சத்தமே காணும்னு கதவுப் பக்கம் போனேன். கதவு உள்ளே தாள்போட்டிருந்தது! சரி; ஜன்னல் பக்கம் கவனிப்போம்னு பார்த்தேன். பார்த்தேன். ஜன்ன லெல்லாம் மூடியிருந்தது. காதைத் தீட்டிக்கிட்டு கேட் டேன். ஆனந்தியம்மாவோட குரல் கேட்டது! அய்யோ பாவி ! என்னை விடு! விடு !" என்று சத்தம்! எனக்குப் பொறுக்கமுடியவில்லை; புரிந்துகொண்டேன். பல நாளா வலைவீசி, இந்தப் பாலகங்காதரத் தேவர் இன்னைக்கு நினைச்சதை முடிச்சுட்டான் அப்படின்னு தெரிஞ்சுபோச்சு எனக்கு! ஓகோன்னு கூச்சல்போட வாயைத் திறந்தேன். அவ்வளவுதான். வாயை எவனோ கட்டினான். காலு கையிலே கயிறை மாட்டினான் எவனோ! தாழ்வாரத்திலே உருட்டி விட்டானுங்க! காதை யாரும் மூடலே! உள்ளே நடக்குதுன்னு கவனிச்சு கேட்டேன். கொஞ்ச நேரம் ஆனந்தியம்மாளுடைய ஆவேசமான குரல் கேட்டு கிட்டேயிருந்தது! அப்புறம்... சத்தமே இல்லை !... எனக்கு மயக்கம் வந்துடும்போல இருந்தது!...கதவு திறக்கப் பட்டது! என் கட்டுகளும் அவிழ்க்கப்பட்டன! டாக்ட ரம்மா சிலை மாதிரி அசையாம நின்னாங்க ! அவுங்க முகத் திலே...அய்யய்யோ... சாவுக்களை படிந்து இருந்ததை நான் பார்த்து நடுங்கிப்போனேன். காரில் ஏறச்சொன்னார் தேவர், ஏறிக்கொண்டோம். அவர் எங்களை வழியனுப்பி வைக்க கார் அருகில் வந்து நின்றார். 'ஜாக்கிரதை! விஷயம் வெளியே தெரிந்தால் தலைபோய்விடும். ஆமாம். டேய்! உனக்குத்தான் சொல்லுகிறேன் என்று என் தலையில் ஒரு குட்டு வைத்தார். கார் நகர ஆரம்பித்தது. எனக்கும் டிரைவருக்கும் நேராகவே டாக்டரம்மாவின் 1 முகத்திலே தேவர் ஒரு முத்தமிட்டார்! பிணம்போல அம் மாள் இருந்தார்களே தவிர எந்தவிதமான எதிர்ப் பேச்சும் கிடையாது! "அதற்கப்புறம் அந்தத் தேவர்...வருவது போவது. 2 MTLI ?......" 99 "உண்டோ என்னமோ, என் கண்ணில் படவில்லை. ஆனால், அம்மா என் காலில் விழுந்து, விஷயத்தை வெளி 孔
பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/28
தோற்றம்