உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 95 இதோ இவள் தான் காணாமற்போன சீதை! ஹே ராவணா! நீ ஏன் சீதையைத் தூக்கிக்கொண்டு வந்தாய்?...... சொல்! சொல்!" இப்படி வாய்க்கு வந்தவாறு பேசிக்கொண்டும், பிதற் றிக்கொண்டும் - நின்ற சிவநேசரைப் பார்த்து, சிவகாமி, சற்று மிரட்டலுடன் “ இப்ப சும்மா இருக்கப்போகிறீர்களா இல்லையா?' என்று கேட்டுக்கொண்டே அவரது கைகளைப் பற்றிக்கொண்டாள். டைகரும் உதவிக்கு கு ஓடிவந்து, அவரது கைகளைக் கட்டிவிட்டான், ஒரு துணியால்! பின்னர் வண்டிக்காரனின் துணையோடு அவரது காலையும் கட்டி, வண்டியிலே கிடத்தினான். சிவகாமியையும் சிந்தாமணியை யும் வண்டியிலே ஏறிக்கொள்ளச் செய்து, அவர்களை வீட்டுக்குப் போகுமாறும், தான் காலையிலே வந்து எல்லா விஷயங்களையும் கவனிப்பதாகவும் சொல்லி விடைகொடுத் தான். சிவநேசர் வண்டிக்குள்ளே அங்குமிங்கும் புரண்டு வண்டியையே கவிழச் செய்துவிடுவார் போலிருந்தது. சிந்தாமணியும் அவள் தாயாரும் ஒருவர் முகத்தை ஒருவர் வேதனையோடு பார்த்தவாறு, தங்கள் துன்பத்திற்கு ஆறு தல் அளிக்க யாருமில்லையே என்ற ஏக்கம் பிரதிபலிக்க வண்டியில் உட்கார்ந்திருந்தார்கள். எப்போது வீடு போய்ச் சேருவோம் என்ற கவலையோடு! வண்டி அவர் களது இருதய நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல செப்பனிடப்படாத அந்த ஊர்ச்சாலையிலே ஆடி அசைந்து, குண்டு குழிகளில் ஏறி இறங்கி, வீடு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. பாலையூர் மருத்துவ விடுதியில் ஆனந்திக்கு தன் கையால் ஏதாவது அளிக்கக்கூடிய சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும் என்ற ஆவலோடு துடித்துக் கிடந்த நயினா முகம்மதுக்கு அப்படியொரு வாய்ப்பு நள்ளிரவில் கிடைத் தது. விடுதியின் சட்டப்படி வெளித்தாவரத்திலே மட்டுமே நயினா முகம்மது தங்கிட முடிந்தது. ஆனந்தியின் அருகா மையிலேயிருக்கும் சூழ்நிலை அமையாமற்போய்விட்டது. ஆனாலும் அவன் தூங்கவில்லை. ஒரு நாற்காலியில் உட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/96&oldid=1708122" இலிருந்து மீள்விக்கப்பட்டது