பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்


செந்தமிழ் நாட்டைச் செழித்திடச்
செய்ததார் தோழி ! - வாழச்
சேரியில் தோன்றியே சோறின்றிச்
செத்தவர் தோழா ! - அந்தோ !
கந்தலுங் கூளமாய்க் காணப்
படுகிறோம் தோழி ! - அந்தக்
கட்சியில் சேர்ந்துன்றன் கைவலு
வாக்கடா தோழா !

நொந்தவர் நோயைத் துடைப்பதன்
றோஅறம் தோழி ! - இங்கே
நோயுண ராப்பணப் பேய்களும்
உண்டடா தோழா ! - இங்கே
வெந்தபுண் மீதினில் வேலெறி
வாரெவர் தோழி ! - அது
வேதங்களோதிய விற்பனர்
வேலைதான் தோழா ! - அந்தோ
கந்தலும் கூளமாய்க் காணப்
படுகிறோம் தோழி - அந்தக்
கைவலு வாயின் களத்தில்
இறங்கடா தோழா !

98