பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்



வெஞ்சினம்


மாபெரு மிந்த வுலகம் முழுவதும்
மக்க ளுடைமையடா ! -அடா
மக்களுடைமையடா ! -கொடும்
பாபிக ளான வொருசில ரேயிதைப்
பங்கிட்டுக் கொண்டாரடா !-அடா
பங்கிட்டுக் கொண்டாரடா !

பட்டம் பதவி புகழ்சுகம் யாவும்
பணத்தைப் படைத்தவர்க்கே ! - இங்கு
பணத்தைப் படைத்தவர்க்கே - ஏழை
கட்டப் படுகிறான் நாடொறும் வேலையில்
காயும் வயிற்றுடனே-அடா
காயும் வயிற்றுடனே !

நெற்றி வியர்வை நிலத்தில் வடியவே
நித்த முழைத்தவர்கள்-அடா
நித்த முழைத்தவர்கள்-இன்று
பெற்ற குழந்தைகளோடும் தெருவினில்
பிச்சை யெடுப்பதும்பார் ! -அடா
பிச்சை யெடுப்பதும்பார் !


ஈவு மிரக்கமு முள்ளவன் இந்நிலை
யே னெனக் கேட்கவந்தால், -அடா
ஏனெனக் கேட்கவந்தால், - எல்லாம்
தேவதை யின்செய லென்று பழியினைத்
தேய்த்திடு வாரதன்மேல்-அடா
தேய்த்திடு வாரதன்மேல் !

பஞ்சமும் பட்டினி யாலும் மடிகிறார்
பாமர மக்களெல்லாம் ; - அடா
பாமர மக்களெல்லாம் ; - காண

108