பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்பான்

நெஞ்சம் குமுறுது வெஞ்சினம் மீறுது
நீசத் தனங்களினால்-செல்வர்
நீசத் தனங்களினால் !

கூனும் குருடலிப் பேடிகள் நீங்கக்
குலத்தி லுதித்தவர்கள்-உழைக்கும்
குலத்தி லுதித்தவர்கள்-அடா
மானமழிந்துயிர் வாழ்வதைக் காட்டிலும்
மாள்வதுயர்வல்லவோ? - எதிர்த்து
மாள்வ துயர் வல்லவோ?



சோற்றுக் குழைத்துச்
சுதந்திரம் சூனிய மாய்க்
கூற்றுக் கழைப்பும்
கொடுக்கின்றார் - மாற்றுக்குக்
கண்ணிருந்தும் காணாதார்
காதிருந்தும் கேளாதார்
எண்ணிருந்தும் எண்ணா
திருந்து.

109