இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நீ....!
என் மைந்தனின்
மனைவி !
ஆயினும் என்ன ?
நான் உன் பிள்ளை.
நீ....
அழகின் அழகு
மெளனம் உன் அழகு !
கோபம் கூட
அழகுதான் உனக்கு !
வழக்கும் வாதமும்
வாழ்வில் வந்தும்
பிரிவும் உறவும்
பிணங்கிய போதும்
நேசக் கரத்தை
நெகிழ்வாய் நீட்டி
பாசப் பிணைப்பைப்
பரிவாய்ச் சொல்லி
இயற்கை நியதி
இதுவென இயம்பி
கடமைச் சுமையைக்
கருத்தாய் ஏற்றாய் !