இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நீ .......
வாழ்வில் வந்ததும்
வசந்தம் வந்தது
வானம்பாடியின் கீதம் பிறந்தது
நின் ....
காலடிச் சுவடுகள்
கனமாய் பதிந்ததும்
என் ....
இதயக் கதவுகள்
எளிதாய்த் திறந்தன
பின் ....
உன் தோளில் என் துன்பம்
உன் சொல்லில் என் அமைதி
உன் மடியில் என் மரணம்
நான் .......
மீண்டும் பிறப்பேன்
உன்னிடமே!