பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

பேயுளங் கொண்டு பீற்றிப்
பிதற்றிட வேண்டாம் நெல்லே
வேயள விருப்பினும்நீ
வீரியம் விளம்ப வேண்டாம் !

சோளங்கேள் வரகு கம்பு
சுவைமிகு கரும்பு, - மற்றும்
நீளும் நம் மினத்துக் கென்றும்
நிலையான வாழ்வுக் கேது,
காளைகள், கறவை மாடு
கன்றுக ளெனவே காணாய் !
நாளும்நா ரிைவற்றுக் கேற்ற
நல்லுன வாகி வாழ்வேன்.

அயர்வின்றி நிலத்தில் பன்னாள்
ஆவலா யுழுத காளைக்
குயிருள்ள வரையு முன்னால்
ஒருசிறு பயனு மில்லை !
பயிரென்று பட்டம் பெற்றும்
பரிவின்றி வாழு முன்றன்
பெயர்மட்டும் பெரிது , நெல்லே !
பேசிடின் சிறுமை கண்டாய்

யோசித்துப் பாரா தே நீ
உளறிய சொற்களுன்றி
வாசித்த பெரியோ ருக்கு
வருத்தத்தை வரவழைக்கும் !
நேசித்து வாழும் நேர்மை
நெஞ்சத்தி லிருந்தி ருந்தால்,
தேசத்தின் நலத்தை நீயும்
தெளிந்தனை யென்போ மன்றோ ?

131