பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்



’மணமி லாதன வாகி யிங்குள
மலரெ லாமெனையே - வைது
மனது நோவதை விடவு மினியது
மரண மென்றதுவே!

*






தன்னை யறிந்த
தலைவன் தனிப்பண்ணைச்
சென்னெல் சிரஞ்சாய்த்துச்
சேவிக்கும் - கன்னலிரும்
பாலைக்குக் காக்கும்.
அரும்புமுகை யாய் முல்லை
மாலைக்குக் காக்கும்
மதர்த்து.

136