இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவிஞன் நீ
என்னைப் பெற்றதும்
பிறந்தது ஞானம்.
நாட்டின் சுமையோ
நாற்பது கோடி
நலிந்த நிலையில்
நானும் ஒன்றா ?
என.... நீ....
உயிர்த்த மூச்சு
உலர்ந்திடும் முன்பே,
பசியில் அலறிய
பாவச் சுமை நான்.
பசுமை அறியாப்
பாவை என் வறட்சி,
அள்ளக் குறையா
அமுத சுரபி !