பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்


காத்த மனிதரைக் காக்க
வேண்டியது - வாழ்வில்
கடமை யானதினால்
புத்துக் காய்ப்பது புரிந்து
புகழ்பெறவே - எனது
பொழுதுபோக்கிடுவேன்.

அறுகு பூண்டுபுல் லருகில்
முளைத்தென்னைச் - சுற்றி
அடர்ந்து வளர்ந்திடுமேல்
சிறையிலடைத்தது போன்று !
சிறுமையுடன் - சாலச்
சிந்தை நொந்திடுவேன் !

தக்க விதம்பயிர் செய்யத்
தக்கவர்க்குத் - தயவாய்த்
தக்க படிகாய்த்து
மக்கள் பசிப்பிணி நீக்கும்
மாமருந்தாய் - நானும்
மகிழ்ச்சி யடைவேனே !

138