பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


துன்பமுற்ற குயில்


விரிதி ரைக்கடல் தன்னில் குளித்துடல்
வெப்பம் நீங்கி விரிந்த இளங்கதிர்ப்
பருதி வானவன் தோன்றினன் கீழ்த்திசை
பார்க்கப் பார்க்கப் பரவச மாகவே !

சுருதி கூட்டி நறுமலர் யாழினில்
சுரும்பெழுப்பக் கரும்பினு மின்னிசை
குருதி யொத்த விழியும் கலங்கியே
குயிலு முள்ளங் குலைந்து குமுறவே

இனிய நறுமணங் கமழும்மென் காற்றிலே
இலையும் பூவும் இசைந்திசைந் தாடவும்.
பனியின் நீர்த்துளி முத்தணி யாகவே
பச்சைப் பயிரினம் நச்சி மகிழவும்,


கனியு மின்பக்கண் காட்சியைக் கண்ணினால்
காணக் கைத்தது போன்று கிளைமிசை
நனிவருந்தி யிருந்தது பூங்குயில்
நல்ல நேரம் நனியும்வீணாகவே !


நாடொறும்அதிகாலை யெழுந்ததும்
நசையரும்பிட நாணி நகைப்பதும்,
பாடு வாயெனத் தன்பெடை கேட்பதும்,
பவள வாய்முத்தம் நீ கொடு வென்பதும்


வேடிக் கைவிளை யாடல் முடிந்ததும்
வேணு கானமும் நாண இசைப்பதும்,
காடு முழுவது முள்ள வுயிரினம்
காது குளிரப் பருகிக் களிப்பதும்,

139