பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்


வாழி பொழுது

பொழுது புலரும் பொழுதி லொளியாய்ப்
புகுந்து புலர்கிறது
பொழுது மறையும் பொழுதி லிருளாய்ப்
புகுந்து மறைகிறது !

நீரும் நிலமும் வளியு மொளியும்
நெருங்கி நீங்கி நெடும்
போரும் புகலும் புரிந்திவ் வுலகைப்
போற்றிக் கொள்கிறது !
இவ் வுலகும் பந்தை யொத்திங்
கிருந்து சுழல்கிறது
விந்தை யுயிரும் உள்ளும் வெளியாய்
விரும்பி யுழல்கிறது !
சீவன், விதையாயிருந்து சிறந்த
செடியு மாகிறது
பூவும் காயாய்ப் பொருந்தும் விதையாய்ப்
புதுமை கொள்கிறது !

கோழி முட்டை யிட்டுக் காத்துக்
குஞ்சு பொரிக்கிறது
வாழும் குஞ்சே கோழி யாகி
வாழ்வு கொள் கிறது !

அருவ மான வளியு மொளியும்
ஆவி யாகிடவும்,
உருவமான நீரும், நிலமும்
உடலு மாகிடவும்,

வாழி பொழுதே வாழி யென்று
வரவ ழைத் திடுவோம் !
வாழி பொழுதே வாழி யென்று
வழிய னுப் பிடுவோம் !

142