பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


வைகறை


கோழி கூவிடுதே ; - இருளும்
குலைந்து தாவிடுதே !
பாழும் யனியாட்சி - அஞ்சிப்
பதுங்க லாயிடுதே !

பொழுது புலர்ந்திடுமே - புதுமைப்
பூக்கள் மலர்ந்திடுமே
வழிதிறந்திடுமே - அரசியல்
வாழ்வு தித்திடுமே !

மெய்ம்மறந்துறங்கும் - இனிய
மெல்லிய யல் மடவீர்
கைகளுதறிநிமிர்ந் - தெழவே
கண்மலர்ந்திடுவீர் !

இதய மலர்தனிலே - வதியும்
இனிய கவிவண்டு
புதிய மதுவுண்டு - கவிதை
புனையக் கேளடியோ !

உட்க ருத்தினிலே - உதிக்கும்
உணர்ச்சி யுருவாகிப்
புட்க ளாம் பாணர் - பண்கள்
மொழியக் கேளடியோ !

'வெற்றி நம' தெனவே - வைகறை
வெண்சங் கொலித்திடுதே !
'கொற்றம் நம' தெனவே - வண்ணக்
கொடியு யர்ந்திடுதே !

தொடர்ந்த போராலும் - துயோர்
துணையின் திறத்தாலும்
அடிமை யிருள் போச்சு - சுதந்திர
அருணோதயமாச்சே !

143