பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்


அறிமுகம்

உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தார்
உள்ளத்து ளெல்லா முளனென்ற - வள்ளுவரின்
ஒற்றைக் குறள்பாவை யுண்மையெனக் கொண்டொழுகப்
பெற்றதாற் பெற்றதிப் பேறு.

எனைவிட்டுச் செல்ல இசைந்தேங்கு மிளமை
தணைவிட்டுப் புல்லித் தறுகண் - புனைவொட்டும்
வாலிபன்நா னென்ன வனிதையர்தம் கண்துன்னும்
காலமிது வென்று கணித்து.

குரலொன்றி நின்றும் குறியொன்றி நட்டும்
விரலொன்றிற் றென்றுர் விளம்ப - நிரலொன்றி
ஊரிலிருந்தோ றொன்றாகிச் சென்றாரிப்
பாரிலிருந் துய்யப் பரிந்து.

நட்டார் பிரிந்து நகர்ப்புரம் நண்ணிடினும்
மட்டார்மா, தென்னை, கதலிபலா - கட்டார்ந்த
வேலிகழ்ந் தங்களது வீட்டருகில் தோட்டமதில்
காலிகன் றுண்டு கலித்து.

உழைத்திசைந்து வாழும் குடிகளுட னொன்றித் தழைத்திசைந்து வாழும் தமிழன் - அழைத்தாலும்
வேறுதொழில் செய்ய விரும்பா னெனவிதந்து
கூறுவதுண் டூரில் பலர்.

தந்தை தவறியதும் தாயே தலைவியெனச்
சிந்தை சிதறாது செப்பமுடன் - நிந்தை
நிகழாது சார்ந்து நிறைவுறச் செய்துர்
இகழாது சேர்த்தா ரிசை.

144