உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பேச்சு



நான்.....!
காதலிப்பது
கவிஞனை மட்டுமே!
ஏனெனில்
படைப்பு,
அவனது பிறப்பு.
நானோர் பசி !
என் கிசு கிசுப்பில்
அவனது படைப்பின் ஆற்றல்
பன் மடங்காகும்.
நான்...... !
அவன் திறவுகோல்
கனவுகளின் விழிப்பு!
இழந்த
காதலின் கீதம்!
என் புகலிடம் !
என்னைப் -
பற்றும் போதே
பற்றை விடுகிறான்.
அவன் ஓர் கவிஞன்
காலத்தின் கல்வெட்டு
ஞாலத்தின் விழிப்பு!
ஞானத்தின் நிலைப்பு?