பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்


மீதினில் காக்கைக் கும்பல்
மெதுவாக எழும்பும், குந்தும் !
கத்துடன் கத்தும் ; பார்க்கும்
சுருக்கமாய்ப் பறக்கும் ; குந்தும் !

அங்கொரு புற்று ; பன்னூ
றாயிரம் ஈசல் கூடி,
'இங்கினி யிருந்தால் பெற்ற
இறகுவீண்! எனவே, யின்றக்
கொங்குலாம் வெளியில் கொஞ்சம்
கூட்டமாய்ப் பறந்து லாவித்
தங்கிட வரலா மென்றே
தயங்காது கிளம்பும் மேலே !

உலகிடை நடப்ப தொன்றும்
உணராத ஈசல் கூட்டம்,
பலபல பார்க்க எண்ணிப்
பறக்கையில், பட்டாம் பூச்சி
சிலசில இயற்கைக் காட்சி
சிந்தையில் பதியக் காட்டும் ;
கலகலப் பாகக் கத்திக்
காக்கைகள் பறக்கும் குந்தும் !

பறந்திடும் பட்டாம் பூச்சி
பார்க்கவே பாழுங் காக்கை,
பறந்திடும் ஈச லொன்றைப்
பழம்போன்று கெளவிக் கொண்டு
பறந்திடும் விழுங்கி விட்டுப்
பறம்புப்பாய் முகட்டில் குந்தும் !
பறந்திடும் பின்னு மொன்றைப்
பற்றிடும் விழுங்கும் குந்தும் !

152