பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்பான் கவிதைகள்



செங் கரும்பு

செங்க ரும்பே செங்க ரும்பே !
சிறுவர் வந்து கேட்கிறோம்
'எங்கள் குறையை நீக்க வேண்டு
மென்று கூறி யின்றுனை !

இல்லை யில்லை யெமைவி ரும்பும்
எந்த சீவ ராசியும் !
நல்லை நல்லை யென்று னக்கு
ஞாலங் கூறு தாசியும் !

கனியும் தேனும் பாலு மாகக்
கருதி யுண்டு நாடொறும்
நனியு மழகு செய்து வந்தும்
நாறு தெங்கள் மேனியும் !

கோணல் மாண லாக நீயும்
குள்ள மூங்கிற் குச்சிபோல்
காண வுஞ்ச கித்தி டாமல்
கவினி லாதி ருக்கிருய் !

ஆன போதும் உன்னைக் காணின்
ஆவ லாக, யாவரும்,
'நானும் நீயும் ' என்ன முந்தி
நனியும் தின்ன வேண்டுவர் !

'தேனும் பாலும் தோற்ற தென்னத்
தீஞ்சு வைப யக்குமுன்
மேனி போலி னிக்க நாங்கள்
மெத்த வும்வி ழைகிறோம் !

'செங்கரும்பே, எனஇ னிக்கும்
சிந்தை யெய்திச் சிறக்கவே
எங்க ளுக்கு மட்டு முன்றன்
இரகசி யம்இ யம்பிடே !

154