பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


மாடு

எங்கள் வீட்டு மாடு பாரில்
இணையில் லாத மாடு !
கொங்கு நாட்டு மாடு ! செல்வம்
கூட்ட வுள்ள மாடு !

நுடங்கும் வாலும் கொம்பும் காதும்
நுனிசிறுத்த தோடு
மடிகு ளம்பு கண்பெ ருத்து
மதிப்பு வாய்ந்த மாடு !

அருமைக் கன்றை நக்கி யூட்டி
அகங்க ளிக்கும் மாடு !
பரும னான தவலை வடியப்
பால்க றக்கும் மாடு !

பச்சையான புல்லைக் காணின்
பரபரப்பி னோடு
இச்சையாறத் தின்ற பாலை
இனிமை யாக்கும் மாடு !

பசுவி ருக்க வரமுங் கூடிப்
பயிர்செழிக்கும் காடு ;
சுசிமி குந்து சோறும் சாறும்
சுவைக்கப் பண்ணும் வீடு !

பாலும் நெய்யும் மோரு மாகப்
பயன்படுத்தும் நாடு !
காலம் முற்றும் சேம மன்றிக்
காண்ப தில்லை கேடு !

குழந்தை பேணு மன்னை யென்னக்
குடியைப் பேணும் மாடு !
தொழத்த குந்த மாடு காணித்
தொழுவி லுள்ள மாடு !

157