திரிலோக சீதாராம்
(ஆசிரியர் : சிவாஜி)
'லிரிக்'
முத்துக் கவிதை
காணுவன, நெஞ்சிற் கருதுவன. உட்கருத்தைப் பேணுவன யாவும் சிருஷ்டி ரகசியத்தை அறியத் துடிக்கும் மனித இதயத்தின் ஏக்கக் குரலாக அமைகின்றன. புலன் உணர்ச்சிகளுக்கும் காரண காரிய அறிவுணர்ச்சிக்கும் அப்பால், இதயத்தின் ஆழத்தில் ஊற்றெடுத்துப் பெருகும் அனுபவங்களை அழகுணர்ச்சியுடன் வெளியிடும் கலைகளை மென்கலைகள் அல்லது லலித கலைகள் என்று கூறுகிறோம். இவற்றின் பயன் கலைஞனுடைய ரஸானுபவங்களை (மெய்ப்பாடுகளை) ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வரப்பெற்று, ரஸிகனுடைய உள்ளத்தில் உறைந்து கிடக்கும் அழகுணர்ச்சி புட்குரல் எழும் விம்மித நிலைக்கு உயர்ந்து தற்போது இன்பம் துய்த்தலாகும்.
இனிய ராகத்தின் மூர்ச்சனையிலும், அற்புதமான சிற்பத்தின் அங்கக் குழைவுகளிலும், ஒவியத்தின் வர்ணக்கலை கலவையிலும் தோன்றும் இதய ஏக்கத்தை, தாளக்கட்டுடன் எழுத்தில் வார்த்தெடுக்கும் வழிதான் கவிதை.
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியில் கவிதைத் துறை இப்போது வளர ஆரம்பித்திருக்கிறது. கடவுளின் பல அவசரங்களைப் போல இதய துக்கத்தின் பல அவசரங்களையும் தனித்தனி வடிவங்களில் வார்த்தெடுக்கும் முறை நமக்குப் புதிது. குறிப்பிட்ட ஒரு அனுபவம்,
15