பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


தனிமையில் இனிமை

தங்க நகைசெய்யும் தட்டானை யொத்துள்ளீர்
எங்கும் திரும்பாதிவ்வாறிங்கே - முங்கி
அமிழ்ந்த நிலையில் அகமொன்றி யாங்கு
தமிழ்நூலி லொன்றித் தனித்து?

சித்திரத்தைப் பார்த்து நான் சிந்தைக் குரைத்ததிது
பத்திரம், பொற் பாவையிவள் தோற்றம் - நித்திரையைப்
பங்கப் படுத்தாது, பாழாய்ப்போ காதிரவு
இங்கிதமாய் ஏகுமிந் நாள்

ஒற்றை யொருசொல் உதிர்ந்த துளங்கொண்டும்
சற்றும் விளங்காமல் சமர்த்துப்பெண் - மற்றும் நீ
உற்றதனை யோர வுரையென்றே னுள்ளம்
பற்றியதை யாயப் பகுத்து.

முகத்துதிகள் செய்ய முயலாது முன்வந்
திகத்தில் முனிந்தாங் கெதிர்க்கா - தகத்தில்
தூய நினைவுகள் தோன்றத் துணிந்து நூல்
ஆய முனையு மகம்

பணம்சேர்ப்ப தொன்றே பழகிப் பாங்காய்
குணம் சேர்த்த லொன்று குறைத்தீர் - மனம் சேர்த்தால்
ஏமாளி யென்றுலக மேசு மிசையில்லாக்
கோமாளி யென்று குறித்து.

முண்மரத்தின் மீதுமண முல்லைமலர்ந் துள்ளதெனின்
கொண்மனிதன் கொய்து கொள்வான்கொல் - உண்மனிதன்
நல்லதையே நாடி நயந்துகொடுத் தாலுமிழி
புல்லனதைக் கொள்ளான் புரிந்து

174