பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்



மே தினம்

போதலரும் போதாய்ப பொதுவுடைமைப் பூதலத்தின்
மீதலரு மென்று மிடுக்குடனே - ஓதலுறக்
கோதலரும் கொள்கைக் கொடியோரால் கூடுகிற
தீதுலரச் செய்யும் தினம் !

அறிஞரகமலர, அட்டையாய்ச் செல்வம்
உறுஞ்சுவோருள்ள முலர, - வறிஞராம்
பாட்டாளி மக்கள் பரவசப் பட்டவராய்க்
கூட்டாளக் கூடும் தினம் !

கையூட்டதுவொன்று, காப்பூட்டதுவொன்று,
பையூட்டதுவொன்று பாழென்று - மெய்யூட்டி
எண்ணியெடுத்தெறிந்தாங் கிவ்வுலகைச் செப்பம்செய்
புண்ணியர்கள் போற்றும் தினம் !

'முல்லை நறுமணத்துள் மூழ்கி யிளந்தென்றல்
புல்லப் புகுந்த பொழுதொப்ப -நல்லதெனும்
மேதினம் மே லானோர்தம் மேனிபுள கம்போர்க்கும்
மா தினம் தன் மானத் தினம் !

178