பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்


காலத்தை வீணாய்க் கழிப்போர் கடையரென
ஞாலத்தில் நல்லோர் நவில்வதால் - சீலத்தைக்
கண்ணாகக் காத்துக் கடைத்தேற வேண்டுமெனும்
எண்ணமெனை யீர்த்த திணைத்து.

தனிமைக்கிங் கென்னைத் தகவமைத்துக் கொண்டே யினிமையாய் நேர மியங்க - நனியும் நான்
புனித நூல் கற்றுப் பொழுது கழித்திடுவேன்
மனிதனென வேண்டி மதித்து.

வாழ்வாங்கு வையத்துள் வாழ்ந்தார் வரலாறு
தாழ்வாங்கு வைத்தால் தகர்த்திடுவர் - வீழ்வாங்கு
நேரவே நேராது, நீணத்தில் வேரூன்றப்
பாரெங்கும் பற்றும், படர்ந்து.

பொய்யிற் பிறந்த புனைகதைகள் போற்றிடவே
மெய்யிற் பிறந்த தெனமிழற்றிச் - செய்யில்புல்
நாற்று நடுதலென நம்முளத்தில் நட்டதனை
யேற்றுநலி கின்றோ மிகத்து.

சத்தியமே தெய்வமெனச் சாற்றும்சொல் சத்தியமாய்
உத்தமர்தம் முள்ளத் துறைவதுகாண் - பக்தர்கள்
தெய்வ மறியாது தெய்வத்தைச் சேவித்தல்
உய்வதறி யாத உலப்பு!

'தன்னையே தான்தெய் மாக்கல் தக' வென்பர்
தன்னையே தான்தெய்வ மாக்கானேல் - தன்னையே தானிழந்தோ னானான் தலைகீழாய்த் தாழ்ந்தான் பின் வானிழந்தோ னானா னவன் !

அம்மையுடனப்பன் அகம்புறமுற்றொன்றித்
தம்மை மகவாய்த் தாம்பயத்தல் - இம்மை
மறுமை. மலர்ந்து மணங்கமழ்ந்து மன்னல்
வெறுமையிறப் பாதல் விதி !

190