பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்பான்



சிந்தித்துச் சீராய்ச் செயல்படுவோர்க் கென்றுமே
நிந்தித்தல் நேரா தெனவோர்ந்து - தந்திரமாய்
ஒன்ற வுரைத்த சொல் ஒன்றிற்றுளத்தி லெனில்
என்றும் பயக்கும் நலம்.

நல்லதோ அல்லதோ - நாம் செய்த தேநம்மைப்
புல்லவே செய்து புசிப்பிக்க வல்லதெனச்
சொல்லாத வாயும் சுவைக்காத காதும்மற்
றில்லாதிங் குள்ளோ ரெவர்?

தெளிவு பெருக்கித் திகழ்ந்திடாத் தேசம்
இளகு முளமிறுகி யெள்ளக் - களவாய்க்
கவலையும் கற்பழிவும் கம்பலையாய்க் கண்ணி
ரவலம் பெருக்கு மழுது.

எப்போதும் காணாத இன்னல் களிப்போது
தப்பாது கண்டு தவிக்கின்றோம் - அப்பாவோ
தற்காலம் தாண்டி தவிதவிப்பும் தாண்டி
நற்காலம் காண்ப தெந்நாள்.

191