பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

பின்னிணைப்பு-2

எங்கள் குரு

புலவர் ம. இளங்கீரன்
செயலர் உலகத் திருக்குறள் பேரவை
துணைத்தலைவர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
கோவை.
கவிஞர் அழகுதாசன்





1960- அக்காலம் அவர் 'நவஇந்தியா' புரூப் ரிடராகவும் இலக்கிய பகுதியினையும் நிர்வகித்தும் வந்தார். நாங்கள் குழந்தைக் கவிதைகள் எழுதும் இளம் கவிகள் - நவஇந்தியா நிர்வாகியுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் விலகி இருந்தார். குழந்தைக் கவிதைகள் எழுதும் சிறுவர்களாகிய எங்களின் கவிதைகளில் சில திருத்தங்கள் செய்து வெளியிடுவார். ஒரு சமயம் திருத்தி வெளியிட்ட இலக்கிய ஓவியம், கட்டுரை மற்றும் கவிதைபற்றி ஒரு கடிதம், கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்களுக்கு எழுதினேன்.

அதனை படித்த அவர், எங்களைப் பார்க்க ஆவலுறுவதாக முகவரியுடன் ஓர் அஞ்சலட்டை எழுதினார். அதனைப் பெற்றுக் கொண்ட நாங்கள் பாப்பநாயக்கன்பாளையம் பழையூரில் இருந்த அவருடைய இல்லம் சென்றோம். நானும் என் நண்பர் அழகுதாசனும்.

வெண் தாடியுடன் கூடிய ஓர் உருவம் பாயில் அமர்ந்து கொண்டு ஏதோ எழுதிக் கொண்டிருந்தது. அவ்வுருவத்தைப் பார்த்து, “கவிஞர் வெள்ளியங்காட்டான் வீடு இதுவா? அவா எங்கு இருக்கிறார்” என்று கேட்டோம். "ஓ! இளங்கீரன்-சண்முகமா வாருங்கள்!” என்று எழுந்து வந்து வரவேற்று எங்களுக்கு ஒரு பாயைப் போடச் சொன்னார். அவரது மகன் மனோகரன் பாயைப்

197