பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பண்ணிடையே தெறிக்கின்ற இன்பச் சொற்கள்
பரவசமாய் எனை வருத்த இயலாதென்றேன்.
கண்ணிடையே கருமணிகள் கசங்கும் வண்ணம்
கைகொண்டு பிசைந்தாளைக் காணோம், காணோம் !


இத்தகைய பாடல்களின் தொகுதியே இனிய கவி வண்டு என்ற இப் புத்தகம். இது உயர்ந்த கவிதையா, பாரதிக்கும் கம்பனுக்கும் சமானமாகுமா என்றெல்லாம் விமர்சனக் கலைஞர்கள் ஆராய்வார்கள், ஆராயட்டும். நம்முன் படைக்கப்பட்ட உணவை அதனினும் உயர்ந்த உணவு எங்கேயோ இருக்கிறது என்ற காரணத்திற்காக நாம் ஒதுக்கலாமா? எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் பல இங்கே இருக்கின்றன, வாருங்கள், அனுபவிக்கலாம் என்று அழைக்கிறேன். என் குரலிலே இனிமை இல்லை. உண்மைதான். ஆனால் பாட்டின் இனிமையை உணர்ந்த தமிழ் அன்பர்கள் வாராமலா இருப்பார்கள்? (1948)

20