கருத்துக்கோ ஆதாரங்களை அஸ்திவாரமாக்கி, இலக்கணக் கோயில் கட்டி, சிப்பிக்குள் வைத்த முத்தைப் போல அதை வைக்கிறோம்.
ஆனால் பேய்க்கும் பிரம்மத்திற்கும் கோயில் கட்டுவது வழக்கமில்லை. அதைப் போலவே எவ்வளவுதான் உடனே மனதில் பதியக் கூடிய நிகழ்ச்சியாயிருந்தாலும் மனதில் மாசை வளர்க்கும் கருத்துகளுக்கும் கவிதை இடம் கொடுத்து விடுமானால் அது மக்களைக் கெடுத்துவிடும்.
கவிதையின் சக்தி அதிகம். வசனம் பாடமாவதில்லை, தீங்கைத் தரும் கருத்துக்கள் வசனத்திலிருந்தால் தப்பித் தவறிப் படித்தாலும் மறந்து தொலைத்து விடலாம். கவிதையில் புகுந்தாலோ படித்தவர்களால் மறக்கவே முடியாது. சிறுபிள்ளை விளையாடி வீட்டுக்குத் தீ வைத்தது போலாகும். நரி இடத்திலோ வலத்திலோ போகட்டும். ஆனால் மேலே விழுந்து பிடுங்காமல் போனால் போதும் என்று சொல்லுவார்கள். இது நரிக்கு மட்டுமல்ல. நமக்கும் பொருத்தந்தான்.
சுதந்தர இந்தியாவில், வருங்கால வாழ்விற்கு வழிகள் வகுக்க வேண்டிய இந்தச்சமயத்தில் எழுதுவோர்களும் பாடுவோர்களும் மிகவும் ஜாக்ரதையாக இருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் எழுதாவிட்டாலும் பாதகம் இல்லை. நல்லவை அல்லாதவையை எழுதிவிட்டோமானால் பாதையிலே முள்ளை அள்ளிப்போட்ட பாவத்திற்கு ஆளாவோம்.
மேற்கண்டவைகள் என் அறிவு. எனக்குச் சில சமயம் சொல்லும் புத்திமதிகளாகும். அறிவுக் கிணங்க மனம் நடக்கும் பெருமையை நான் அடையவில்லை. "சிருஷ்டிதான் உனது கடமை. விமர்சனம் உன்னுடையதல்ல, நீ கற்றது கைமண் ணளவு, கல்லாதது உலகளவு.
வெள்ளியங்காட்டான் கவிதைப்படி. அதிலிருந்து கற்றுக் கொள்ளக்கூடியதைக் கற்றுக் கொள். படிக்கும் மாணவன் நீ. பாராட்டிப் பேசத் தகுந்த பேராசிரியன் அல்ல" என்று அறிவு கூறுகிறது.
22