உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒவ்வொரு பிரிவும் இருபது உட்தலைப்புகளையும் ஒவ்வொரு தலைப்பும் பன்னிரண்டு வெண்பாக்களைக் கொண்டும் நூல் சிறப்புற்றுள்ளது. நூல் முழுமையும் பல்வேறு வகையான சுவைகளைக் கொண்ட வெண்பாக்களைக் கொண்டிருந்தாலும் அவற்றிற்கெல்லாம் சமுதாயத்திற்குத் தேவையான நல்வழிச் சிந்தனை உயிரோட்டமாகத் திகழக் காணலாம். கொள்ளுவார் கொள்ளும் வண்ணம் நல்ல நடைநலம் சிறக்க இந்நூலைக் கவிஞர் யாத்துள்ளார். உபநிடதக் கருத்துக்களும் ஆன்மீகக் கருத்துக்களும் திருங்குறட் சிந்தனைகளும் இடையிடையே இந்நூலில் பயின்று வரக் காணலாம். இதற்கு இன்றைய ஆரவாரமிக்க உலக அமைதியை கருதுவிடக் கூடாது என்ற கவிஞரின் ஆர்வப் போக்கே காரணமாகும்.

உபநிடதக் கருத்துக்களை எளிமையாக்கி ஆசிரியர் எடுத்தாண்டுள்ளமைக்கு

வேதத்தைக் கற்று விரித்து விளக்கிடினும்
பூதத்தைப் பற்றிப் புகழ்வது - சாதத்துக்
கானதொரு தந்திரமே ஆத்மிகமன் றென்கிறது
கேனோ வுபநிசத் து

இந்தஎன் ஆத்மாவே ஈசனெனும் வேதாந்த
விந்தைக் கருத்து விளக்கமுற - வந்துமற்
றோமெனும் ஒற்றை ஒரு சொல் உணர்வே நா
னாமெனும் பற்றை யறிந்து

ஆற்றற் கரியவொரு ஆன்மீக வாழ்வில் நாம்
போற்றக் கருதல் புகழொன்றே - சாற்றின்
அதுவே அமிழ்தம் அழிவின்மை ஆயின்
அதுவேநா மாவதறிந்து.

ஆகிய வெண்பாக்கள் காட்டுக்களாகின்றன. இறைவனைப் பற்றியும்

25