இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
"நீ தேர்ந்தெடுத்தால் ஒரு கவிஞனைத் தேர்ந்தெடு தத்துவ ஞானியைக் காட்டிலும் அவனே உண்மையைத் தொடக்கூடியவன்." -ஓஷோ-
வெ.இரா. நளினி
முகவுரை என்றால் என்ன? அதைப்பற்றி நான் ஏதும் அறிவேனா? நடுங்கும் இதயமும், நீர் வழியும் விழிகளும், விம்மி வெடிக்கும் கதறல்களுமே நான் இந்நூலுக்குத் தரும் முகவுரை -யாகும். ஆம், அதுவே இந்நூல்கள் பிறந்த கதையும் கூட.
இன்னும் சரியாகச் சொல்வதென்றால் சந்தர்ப்ப வசத்தால், ஏதுமறியாச் சிறு பெண் தன் தாயின் பிரசவத்தை எதிர்கொள்வது போல, இதுவும் ஒரு அச்சம் தரும் அனுபவமே !