உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர்களும் அல்லல் பட்டார்கள் என்பதைக் கூட. சகித்துக் கொள்ளலாம். ஆனால், அவர்களின் படைப்புகள் புறக்கணிக்கப்படும் அவலம், அதுவும் குறிப்பாகத் தமிழகத்தில் அன்றைய புலவர்கள் அரசனின்தயவைநாடியதுபோல, இன்றைக்கு அரசியல் வாதிகளின் தயவை நாடும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள்.

எல்லா இன, மதமக்களும்போராடித்தம் உரிமைகளைக்கோளிப் பெறும் இக்கால கட்டத்தில் இலக்கியவாதிகள் மட்டும் தமக்குள் ஒன்றுபட்டு உரிமைகளைக் கோராவிடினும், சரியான தங்கள் படைப்புகளை ஒற்றுமையாக மக்களிடம் கொண்டு செல்லும் வழி வகைகளையாவது ஆய்வு செய்யலாம் அல்லவா?

சமீபத்தில் நான் படித்த சில வரிகள் - குறிப்பாக, தமிழில் எழுத வந்தவர்கள் எப்போதும் எந்தக் காலத்திலும் நிரந்தரப் பிரச்சனைகளில் மூழ்கி, கயிற்றின் மீது நடக்கும் வித்தை போல்தான் வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார்கள்". இந்தத்திக்கற்ற நிலை உலகில்வேறு யாருக்கும் இல்லை. எழுத வந்தவனுக்குப்போராட்டம் -ஒருமுனையல்ல. இரு முனை! வாழவும் போராடியாகவேண்டும். எழுதவும் போராடியாக வேண்டும். இரண்டும் எதிரெதிர் விளைவுகளைத்தரும் என்பதனை அறிந்து உழன்றாக வேண்டும்.

ஆயினும் கூடப்பட்டினி கிடந்தும், செத்தும், எழுத்தாளன் எழுதிக் கொண்டுதான் இருக்கிறான். பசி, பிணி, மூப்பு. சாக்காடு என எல்லாவற்றையும் பார்த்துச் சிரித்தபடி எழுதிக் கொண்டே இருக்கிறான்-என்ற இந்த வரிகள், அரைநூற்றாண்டுக்கு முன்என் தந்தை எழுதிய கடிதத்தை நினைவுட்டியது.

'குழந்தாய் அரசனுடைய வயிற்றில் பிறக்க வேண்டியவளானநீ ஒவ்வொரு நாள் மாலையும், காலை உணவுக்கு என்ன செய்வது? எனும் கவலை மிக்க கவிஞனின் வயிற்றில் வந்து பிறந்து விட்டாய். விதி, 'கவி' என்னும் கயிற்றை என் கழுத்திலிட்டு இறுக்கும் இப்பேய்க் கூத்தில் உன்னை ...."என்ற அந்தக் கடிதம் வாழ்க்கை அறிஞனுக்கு வயிற்று வலி போன்றது என்பதை உணர்த்துகிறது.

35