பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உண்மை என்றும் பணித்துளியாக இருந்ததில்லை. அது கனன்று எரியும் நெருப்புத்துண்டு. பொசுக்கி விடும் தன்மை கொண்டது. ஆயினும் அதில் எரிவதும் கூடச் சுகம் தருமோ என்னவோ?

"என் செல்வமே! பணக்காரனாவது மிகவும் சுலபம். அதற்குப் பல வழிகள் உள்ளன. ஆனால் கவிஞனாவது மிகமிகக் கடினம். அதற்கு ஒரேயொரு வழிதான்! அது சத்தியத்தைப் பின்பற்றுவது மட்டுமே! சாதிக்க நினைப்பவன் எத்தகைய கொடிய துன்பங்களையும் ஏற்றுக் கொள்வான். அன்று லெபனான் நாட்டு ஞானி, நாடு கடத்தப் பட்டான்.இன்று உலகம் முழுவதும் போற்றப் படுகின்றான். நானும் ஒரு கவிஞனாவதையே விரும்புகிறேன் என்பதை மறந்துவிடாதே"

எனது இந்த நீண்ட முகவுரை உங்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆயினும் ஒரு கவிஞனின் காலடி ஓசையை நீங்கள் தயையுடன் கேட்டாக வேண்டும். அந்த கரிய இரவுகளின் தாக்கம், என் குழந்தை உள்ளத்திலேற்படுத்திய அச்சம், இன்னும் கூட அகற்றப்படாத நிலையில், இலக்கியவாதிகளான உங்களிடமல்லாது நான் யாரிடம் கூறுவது? என் போன்ற படிப்பறிவற்ற பாமரர்களிடமா? இல்லை. மொழி தெரியாத அண்டைமாநிலத்தில் உள்ளவர்களிடமா? இல்லை, அயல்நாட்டினரிடமா? சொல்லுங்கள்! மனிதநேயம் என்பது அனைவரிடமும் குறைவாகவோ, நிறைவாகவோ இருக்கலாம். ஆனால் இலக்கிய நேயம் அதை அறிந்த இலக்கியவாதிகளிடம் மட்டுமே உள்ளதல்லவா?

       "என் காவியங்களே என் வாழ்க்கை.
       என் வாழ்க்கையே என் எழுத்து.
       என்னைப் பற்றிச் சொல்வதற்கு
       என் இலக்கியங்கள் உயிர் வாழ்தல் மட்டுமே!

என தந்தை தம் இதயத்தை மிகச் சுருக்கமாகத் திறந்து விட்டார். ஆனால், இன்றைய நிலையில் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் நெருக்கமானவர்கள் யார்? இப்படிக் கேட்கும் தகுதியும் உரிமையும் எனக்கு இல்லைதான். ஆயினும் என்தந்தையின் மறைவுக்குப் பின்

36