பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உன்னதமான குறிக்கோளை நோக்கி மனம் தளராமல் உறுதி குலையாமல் நடந்து கொண்டேயிரு உன் குறிக்கோள் உயர்ந்ததாக இருந்தால், அதை அடைவதில் நீ வெற்றி பெற்றால், உனக்கு மட்டும் தானா மகிழ்ச்சி? அனைவருக்கும் - ஆம் அனைவருக்குமே அது மகிழ்ச்சி அளிக்கும்.

"எழுது எழுது மேலும் மேலும் எழுது எழுதிக் கொண்டேயிரு கற்றுக்கொண்டேயிரு உன் ஒவ்வொரு கணமும் செயலில் கழியட்டும். உழைப்புச் செல்வம் தான் நம் குறிக்கோளை அடைய உள்ள அரிய சாதனம். அறிவுதான் நமது உண்மையான நண்பன். ஆற்றல்தான் நமது பரம்பரை மூலதனம் என்பதை மறவாதே."

இவை போன்ற என் தந்தையின் கடிதங்களை இங்கு எழுதுவதன் மூலமாக, அவரின் உள்ளத்தை வெளிப் -படுத்தவும்.என்னால் சொல்ல இயலாததை அவரின் எழுத்துக்கள் மூலமாகச் சொல்லவும், அதன் மூலமாக அவருக்கும், அவரது எழுத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தவும் நினைக்கிறேன்.

என் தந்தை, பத்துப் பெண் குழந்தைகளின் மூத்த குடிமகன் உழைத்து வாழ நிலமோ, குந்தி வாழ குடிலோ அற்ற விவசாயக் குடும்பம். இதில் தமிழின் மீது தனியாத தாகம் ! அதனால், அதன் பால் விளைந்த முயற்சிக்கும், உழைப்பிற்கும் முடிவுண்டா?

       நீர் இறைத்துக் கொண்டிருந்த தாத்தா,
       புத்தகத்தில் ஆழ்ந்திருந்த அப்பா !
       பாத்தி நிறைந்து உடைப்பெடுத்து ஓடிய தண்ணிர்
       முதுகை ஒரு களிமண் கட்டி கடுமையாகத் தாக்க

ஆ... வெனத் திரும்பியவர். மண்வெட்டியைத் தூக்கி எறிந்து விட்டுச் சொன்னார்: "இனி இந்த நிலத்தில் நான் கால் வைக்க மாட்டேன் என்று. கோவைக்கு வந்தார். தையற்கலையைக் கற்றுத் தேர்ந்தார். சால்அநுகர், கண்டியூர், சீலியூர் போன்ற கிராமங்களில் தங்கி, துணிகளைத் தைத்துக் கொண்டே இளைஞர்களுக்கு மாலையில் கல்வி கற்றுத் தந்தார்.

39