பிடிவாதம் அவரது பிறப்புரிமை ! மிகச்சிறு வயதில் ஒரு தவறான வார்த்தையைக் கூற, பிரம்பால் உடம்பை ரணமாக்கிய போதும், அதையே திரும்பச் சொல்ல, சினம் கொண்ட தாத்தா, இடுப்பில் கயிற்றைக் கட்டிகிணற்றில் இறக்கியபோதும், நீரைத் தொட்ட பிறகும் கூட, அந்த வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொன்னதாகப் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன்.
" ஒரு தத்துவ ஞானி ரோஜாவைப் பற்றி நினைக்க மட்டுமே செய்வான். ஒரு கவிஞன் ரோஜாவை முழுமையாக உணர்வான். நீ தேர்ந்தெடுத்தால் ஒரு கவிஞனைத் தேர்ந்தெடு தத்துவ ஞானியைக் காட்டிலும் அவனே உண்மையைத் தொடக் கூடியவன் என்கிறார் ஒஷோ.
ஆனால் அந்த உண்மையோடு வாழ்வது மரணத்தோடு வாழ்வது போல என்பதை அவர் அறிய மாட்டாரா என்ன?
1945-46 ல் வரதராஜபுரம் என்ற இடத்தில் ஒரு மாட்டுக் கொட்டகை, குறுக்கே சில தடுக்குகள், அதுதான் எங்கள் குடியிருப்பு ! சுனாமியைப் போல, கொத்துக் கொத்தாய் அள்ளிக் கொண்டு செல்லும் காலரா நோய் பரவியிருந்த நேரம் அது.
பால் ஒன்றே எங்கள் வாழ்க்கையின் ஆதாரம். ஒரு நாள் பால் கறந்த பாத்திரத்தில் சிறிதே நீர் தெளித்து பாலில் ஊற்றியதைப் பார்த்த அப்பா, அதை உதைத்த உதையில் குடிசைக்கு அன்று பாலாபிஷேகம்! தான் ஒரு கவிஞனுக்கு மனைவியாகிப் பாலிலே நீர் கலக்கும் பாதகத்தைச் செய்கிறாயே, இந்த பாவத்தை எங்குச் சென்று தீர்ப்பது? என்ற அப்பாவின் கத்தலில் அம்மா விக்கித்து வெருண்டு போய் நின்றாள். வெள்ளமாகக் குடிசையில் பரவிய பாலைப் பார்த்து மனம் வெதும்பினாள். அது அவளின் ஓயாத உழைப்பு ! எங்களின் உணவும் கூட! ஆனால் என்ன செய்வது?
எங்கள் குடியிருப்புக்கருகில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த தம்பதிகளைக் காலரா தொற்றியது. அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட பாதையிலிருந்த அவர்களை அப்பா
40