உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீட்டுக்குச் சென்றேன். அவர்கள் அன்றைய உணவை என்னிடம் கொடுத்து, "இனிமேல் நீயே வந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு போய் விடு " என்று சொல்ல, மறுநாள் அப்பா என்னை அங்கு அனுப்பவில்லை. வெறும் சோறும், மோரும் எங்களைப் பார்த்துப் பல்லிளித்தது. தன்மானமோ, சுயமரியாதையோ அப்பாவின் சொத்தானபோதும், சில நாட்கள் கிடைத்த உணவின் சுவை என் நாக்கில் ஊர்ந்து கொண்டிருந்த தென்னவோ நிஜம்.

ஏழு மணியளவில், லாந்தர் வெளிச்சத்தில் நானும் அப்பாவும் மெதுவாக நடப்போம், கூப்பிடு தூரத்தில் உள்ள தோட்டத்திற்கு. இரண்டு புறமும் அடர்ந்த வேலி. பாதையில் சில சமயம் சுருண்டு கிடக்கும் பாம்புகள் 1 இரவு நேரம் இளைஞர்களுக்குப் பாடம் நடத்துவார் அப்பா. ஏனெனில் பகலில் அவர்கள் நிலத்தில் உழைப்பவர்கள்.

நொய்யல் நதியில் குளிக்கும் சுகம் ! அங்கு விளையும் அரையனா அரைக்கீரை தரும் சுவை! புறநானூறு, இராமாயணம், நளவெண்பா போன்ற பாடல்களின் நயம் எனச் சில மாதங்கள் இனிமையாகக் கழிய, அம்மாவைக் காசநோய் தொற்றியது.

அம்மா எவ்வளவு அழகானவள், எளிமையானவள். பொன் போன்றவள்! பொறுமையே அவளின் அணிகலன். வேறு அணிகலன் இல்லை என்பதால் அதையே அணிந்து கொண்டாள் போலும்.

இப்போதும் கூட. காலையும் மாலையும் தன் குஞ்சுகளை வரிசையாக அழைத்துச் செல்லும் தாய் மயிலைப் பார்க்கும் போது. தாயின் அன்பும், பாசமும், கடமையும் நினைவுக்கு வரும். எனக்கு அவை ஏதும் கிடைக்கவில்லை, என்றாலும் அன்னை எங்களை விட்டுச் செல்ல, தேவையற்றுப் பிறந்த நானும் ஒரு காரணமோ? நானும் ஒரு சுமையோ, என எண்ணுவதுண்டு.

"குழந்தாய்! இம்மண்ணுலகில் இறக்கப் பிறந்தவர்களாகிய நாம், இறப்பதற்கு ஏன் பயப்படவேண்டும். என்று எனக்கு விளங்கவில்லை. இறப்பதற்குப் பயப்படக் கூடியவர்கள் உலகில்

44