பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்வது எப்படி? நான் என்ன சொல்கிறேனென்றால், இருக்கும்வரை கடமையாற்ற வேண்டும். இதில் நாம் தவறிவிடக்கூடாது. நோயாளியான அன்னைக்கு நீ எந்த விதத்திலும் மனக்குறை தோன்றும்படி நடந்து கொள்ளக்கூடாது. அவளது அமைதியையும் நம்பிக்கையையும் பாதுகாப்பது நமது கடமையாகும்", என்று அப்பா கூறிய போதிலும் மரணம் என்னவோ நிகழவே செய்தது.

சீன ஞானி சொன்னதுபோல, பிறப்பதற்கு முன் எங்கேயிருந்தாளோ அங்கே சென்று விட்டாள். வாழ்வின் நியதியும் அதுவே. இலையுதிர் காலம், வசந்த காலம் என்ற இயற்கையின் மாற்றமே மனிதர்களின் மாற்றமும். இதில் துக்கப்பட என்ன இருக்கிறது?

       வாழ்வு
       அது ஒரு அழகான மணம் பரப்பும் மலர் !
       ஒருநாள் காலையில் மலர்ந்தது
       கொஞ்சம் மகிழ்ந்தது - பிறகு
       மெல்ல மெல்ல வாடியது
       காற்று வீசியது
       மலர் உதிர்ந்தது
வாழ்க்கை என்பதும் அம்மலர் போன்றதே.
       அம்மலர் தான் வாழும் காலம் வரை
       தன் நறுமணத்தைப் பரப்பியது
       காற்று மரணத்தைக் கொடுத்தபோது
       களிப்போடு ஏற்றுக் கொண்டது
       இதுதான் வாழ்கை
       இது தான் மரணம். பின்
       அழுது புலம்புவது எதற்காக?
                                   என்கிறது ஒருக் கன்னடக்கவிதை.

என் தாயும் அவ்வாறே வாழ்ந்தாள் மணம் பரப்பி மறைந்தாள். "என் செல்வமே!

"செய், அல்லது செத்து மடி" என்றார் அண்ணல் காந்தி.

45