உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஒரு கவிஞனின்
காலடிச் சுவடுகள்

காலம் விசித்திரமானது, கனவுகளையும் மென்று விழுங்கி மெளனித்திருக்கும். கால வெள்ளத்தில் கரைந்து போகவே எஞ்சியிருக்கும் அரிய மரபு இலக்கியங்கள். பல படைப்புகள் சமூகக் கவனிப்பின்றியும் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. அப்படியான மெளனங்களின் உடைதலிருந்து எனது தாத்தா கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்களின் கவிதைகளைத் தமிழ் வாசகர்களுக்கு மீண்டும் அடையாளம் காட்டும் முயற்சியின் வெளிப்பாடே இந்நூல்.

தமிழ் இலக்கியத் தடங்களில் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. நவீனக் கோட்பாட்டுத் தளங்களில்